Shadow

Tag: மார்டின் திரைப்படம்

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
மார்டின் படத்தின் முதல் சிங்கிளான "ஜீவன் நீயே" பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில் இப்பாடல் மனதை மயக்குகிறது.துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப் பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில் ...
மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் உதய் K. மேத்தா, "ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவ...
ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

சினிமா, திரைத் துளி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், துருவா...