
நம்மாழ்வார் – உளனெனில் உளன்
இறைவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். இல்லை என்றால் இல்லை. இருந்தும் இல்லாமலும் பரவியிருக்கும் பரம்பொருளே பெருமான் .
பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிகவும் சிறப்பு மிக்கவர். அவர், நமக்கான ஆழ்வார் என்பதால் “நம்மாழ்வார் (நம்ம ஆழ்வார்)” என அன்போடு அழைக்கப்படுகிறார். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களில் அதிக பாசுரங்கள் நம்மாழ்வாருடையது தான்.
மொத்தம் 1295 பாசுரங்கள் அருளியுள்ளார். திவ்வியப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பிறர் பாடக் கேட்டுப் பிறகு தான் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். நம்மாழ்வார் இல்லையென்றால் திவ்வியப் பிரபந்தமே இல்லை.
பன்னிரண்டு ஆழ்வார்களில் பத்து பேர் திருமாலைப் பற்றி மட்டும் தான் பாடியிருக்கின்றனர். ஆண்டாள், திருமாலையும் பாடி, பிற ஆழ்வார்களின் பெருமையையும் பாடி சிறப்பு சேர்த்தார். ஆனால் மதுரகவியாழ்வார், திரு...







