பிக் பாஸ் 3 – நாள் 25
முந்தின நாள் கவின் - சாக்ஷி - லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். 'நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு' எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம்.
அடுத்து 9 மணிக்கு மேலே சாக்ஷி பாத்ரூம் ஏரியா வர அங்கே வைத்துப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் அதே ப்ளா ப்ளா, ஆனால், 'ஒரு தடவை ட்யூப்ல இருந்து வெளியே வந்த பேஸ்ட் மறுபடியும் உள்ள போகாது கவின்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார் சாக்ஷி. அதே நேரத்தில், அந்த பக்கம் லியா பாட்டு பாடி ஜாலி பண்ணிக் கொண்டிருந்தார். வெளியே சோகமாக வந்த கவின் நேரா லியா அருகே போய் அமர்ந்தார். 'மறுபடியும் முதல்லேர்ந்தா?'...