தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி
(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.)
//தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. //படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் உலோகத்தைக் குறிக்கவில்லை. மாறாக அது உரிமையைச் சுட்டுகிறது. வெறுமனே நிலத்தை அனுபவிப்பதற்கான உரிமை இல்லை, ஆள்வதற்கான உரிமையாக உருவகப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.
//விவசாய நிலத்தின் மீது உரிமை //
நிலத்தை ஆளும் உரிமை வைத்திருந்தவனை, அதிகாரவர்க்கத்துக்கு வரி கட்டிக் கொண்டு, நிலத்தை உழுது அனுபவிக்கும் உரிமையை மட்டு...