Shadow

Tag: முதல் நீ முடிவும் நீ திரைப்படம்

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

முதல் நீ முடிவும் நீ – இயக்குநராகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்ட மென்மையான டிராமா திரைப்படமான “முதல் நீ முடிவும் நீ”-ஐ, இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கியுள்ளார். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியைப் பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னையில் 90’களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளைக் கொண்டுள்ளது. நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலி...