Shadow

Tag: முனீஷ்காந்த்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள்ள...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
Infinity விமர்சனம்

Infinity விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இவர்கள் தான் குற்றவாளி என்று சிலரைச் சுட்டுக் கொல்கிறார். படம் முடிந்தது என்று நாம் நினைக்கும் போது, இவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு மாபெரும் வில்லன் வந்து ஆட்டம் இனி தான் தொடங்கப் போகிறது என்று உண்மையாகவே நம்மை மிரட்ட, INFINITY என்னும் தலைப்புக்கு ஏற்றார் போல் பாகம் 2 என்று போட்டு படத்தை ம...
தக்ஸ் விமர்சனம்

தக்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான். சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்டு...
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார். பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை. ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு, வ...
ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை. சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், ஒரு காரைப் பார்த்து அதை எந்தக் கேள்வியுமின்றி ஓட்டிக் கொண்டு வருகிறார். அது அவர் உபயோகித்த காரா அல்லது பாகப்பிரிவனையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட காரா என்பதிலெல்லாம் தெளிவில்லை. காட்சிகளின் நகர்விலுள்ள இத்தகைய தெளிவின்மைதான் படத்தின் மிகப் பெரும் மைனஸ். டைட்டில் கார்ட் போடும் பொழுது வரும் அனிமேஷன் ரசிக்க...
கடாவர் விமர்சனம்

கடாவர் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள். படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு. இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். இரண்டு படத்திற்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டின் கருவுமே ஏறக்குறைய ஒன்றேதான். சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏசிபி (ACP) விஷாலாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். பத்ரா தான் மாஸ்டர் ப்ரெயின் என்பதால், இவரது பாத்திரத்திற்கான டீட்டெயிலிங் கம்மியாகவே உள்ளது. ஆனாலும் தன் க...
நதி விமர்சனம்

நதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மதுரை, சாதி, பதின் பருவத்துப் பையன்களின் கையில் சிறுவயதிலேயே கத்தி, கொலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் சுள்ளான்கள், கனவுகளோடு இருக்கும் இளைஞர்கள் என சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் கதை தொடங்குகிறது. ஷட்டில்காக் வீரனான சாம் ஜோன்ஸ்க்கும், கயல் ஆனந்திக்கும் காதல் மலருகிறது. அவர்களுக்கு இடையில், ஜாதியும் கெளரவமும் தன் கோர முகத்தைக் காட்ட, காதலர்களின் கதி என்னவென்பதே படத்தின் கதை. கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் மதுரையின் குற்றப்பின்னணி பற்றிச் சொல்வது; பின், இதுதான்ங்க காலேஜ், காலேஜ் வகுப்பறை எனக் காட்டி, அங்கு ஒரு பாடல் – நடனம் அமைத்து, கதைக்குள் செல்ல சுற்று வழியை எடுக்கும் பழமையான கதைசொல்லல் பாணி உபயோகிக்கப்பட்டுள்ளது. கதைக்களம் மதுரை என்பதால், அதன் தொன்மையை உணர்த்தும் குறியீடாக அந்தப் பாணியைப் பயன்படுத்தியிருப்பார் போல இயக்குநர் தாமரை செல்வன். சாம் ஜோன்ஸே படத்தைத் த...
டிக்கிலோனா விமர்சனம்

டிக்கிலோனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் 'ஜென்டில் மேன்' உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று 'டிக்கிலோனா'. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம். 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்' என்பது தான் படத்தின் ஒன்லைன். எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்? டிக்கிலோனா படத்தின் கதை அது தான். தன் மணவாழ்க்கையை மாற்றிக் கொண்டால் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என காலப்பயணம் மேற்கொள்கின்றான் மணி. காலப்பயணக் (Time travel) கதையை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி. சந்தானம் மிக ஸ்லிமாக ஸ்மார்ட்டாக உள்ளார...
செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல் மார்க்கெட்டில் வைத்துச் செமயாக அடித்து விடுகிறான் கார்த்திக். அந்த வீடியோ வைரலாகி தண்டபாணியின் மானம் ஆன்லைன் ஏறிவிடுகிறது. இழந்த தன் கெளரவத்தை மீட்க கார்த்திக்கை மார்க்கெட்டில் வைத்துக் கொல்லத் திட்டமிடுகிறான் தண்டபாணி. அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கார்த்திக்காக ராஜன் தேஜேஸ்வர் எனும் அறிமுக நாயகன் நடித்துள்ளார். நடிப்பும் நடனமும் கை கூடியிருந்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பு ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. அதுவும் கதைப்படி அவர் வடச்சென்னைவாசி எனும் போது, அவரது பேச்சு குழந்தைத்தனமாக ஒலிக்கிறது. அவரது அம்மா லக்‌ஷ்மியாக வரும் ரேணுகோவோ தனது வழக்கமான பாணியில் பேசியே தன் இருப்பை அழுத்தமாகப் பதிகிறார். இது முழுநீள ஆக்‌ஷன் படமன்று. ஒரு கட்டத்திற்கு மேல், மார்க்கெட் தண்டபாணி முனீஷ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியோடு ...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்...
சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது. 'ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?' எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு. படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமார்...