Shadow

Tag: மும்தாஜ் சர்க்கார்

இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்கள...