தொப்பி விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை.
படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள...