Shadow

Tag: முரளி ஷர்மா

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர்வான...
பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை. படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர். மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. 'பவர் பாலிடிக்ஸ்' என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்பே...
தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திர...
தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமிது. 'டூயட் மூவிஸ்' எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மை தானெனப்படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றிப் பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணி புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல (!?) தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்குச் சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக...