Shadow

Tag: மு.ராமசாமி

வாய்தா விமர்சனம்

வாய்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு வரும் ஒவரைத் தவிர்க்க, எதிரே பைக் ஓட்டி வரும் இளைஞன், சாலையில் அமர்ந்திருக்கும் முதியவர் அப்புசாமி மீது ஒரு அவ்விளைஞன் பைக்கால் மோதி விடுகிறான். அவரது வலது கையில் தீக்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு செல்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாசாமி, தனக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, நீதிமன்றமோ ஒரு வினோதமான தீர்ப்பை அளிக்கிறது. சாதிய ஏற்றதாழ்வு, சாதியப் பெருமிதம், ஓர் ஜாதிக்குள் நடக்கும் போட்டி பொறாமை சண்டைகள், அதை மறந்து அவர்கள் இணையும் புள்ளிகள் என படம் பேசும் அரசியல் நுண்ணியமாய் உள்ளது. நீதி இயங்கும் லட்சணம் அடிவயிற்றில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. முதியவர் அப்புசாமியாக மு.ராமசாமி நடித்துள்ளார். கதையோடு இயல்பாய்ப் பொருந்தும் பாத்திரமாக வருகிறார். ஊரில் ஆதிக்க சாதியினருக்குப் பயந்து அடிபணிவதாகட்டும், தனக...
வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

வாய்தா – வர்ணத்தையும் வர்க்கத்தையும் பேசும் பொழுதுபோக்கு சமூகப்படம்

சினிமா, திரைச் செய்தி
புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு, ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ...
கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் உள்ள கருப்புதுரை எனும் முதியவரைத் தலைக்கு ஊத்திக் கொல்லப் பார்க்கின்றனர். கோமாவில் இருந்து எழும் கருப்புதுரை, பிள்ளைகளின் திட்டம் அறிந்து மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கோயிலின் பிரகாரத்தில் சந்திக்கும் குட்டி எனும் அனாதை சிறுவனுடனான நட்பு, ஆவர் வாழ்வில் புது வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிறுவனுக்கும், பெரியவருக்குமான அழகான நட்பின் பயணம்தான் படத்தின் கதை. தலைக்கூத்தல் என்பதை கருணைக் கொலை (Euthansia) என்ற வகைமைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விருப்ப மரணத்தினைத்தான் அப்படிச் சொல்லமுடியும். இங்கு தமிழகத்தில் நிலவும் இப்பழக்கம், சுமை எனக் கருதும் பெரியவர்களை அகற்ற நடக்கும் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட கொலைகள். படத்தின் தொடக்கத்தில், ஓர் ஆவணம் போல் ‘தலைக்கூத்தல் அவசியமா? ஏன் அவசியம்?’ என்ற கேள்விகளை அணுகியுள்ளனர். அந்த ஆவணம் அதற்கு ஆதரவான குரலைத் ...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்பு...
பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

கட்டுரை
மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி ஆர்த்ரேயாவும், மனோரதத்தில் நாம் பார்த்த சோழப் பேரரசுக்கு பங்கம் விளைவிக்காமல் கண் முன் கொண்டு வந்துள்ளனர். பூங்குழலியின் காதலர்களான கொள்ளிவாய்ப் பிசாசுகளையும்கூட மேடையேற்றி இருந்தனர். அதே போல், T.பாலசரவணனின் ஒளியமைப்பு நாடகத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. உதாரணம், கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு வந்தியதேவனும் பூங்குழலி...