ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா
மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா.
"போதை - இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தைத் தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஆழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும் மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லிய...