
வேம்பு விமர்சனம் | Vembu review
அழகான கிராமத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் படமாகக் கவர்கிறது வேம்பு.
சிலம்பாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்பதும், அதன் மூலமாக அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதும் வேம்பு எனும் இளம்பெண்ணின் ஆசை. அதற்கு உற்றதுணையாக இருக்கும் வேம்புவின் தந்தை, மூப்பின் காரணமாக மகளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைக்கவேண்டுமென எண்ணி, தங்கை மகன் வெற்றிக்கு மகளைக் கட்டிக் கொடுக்கிறார் வேம்புவின் தந்தை. கல்யாணமான அன்றே வெற்றிக்குப் பார்வை பறிப் போக, வேம்புவின் வாழ்க்கை எத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகிறது என்றும், அதிலிருந்து அக்குடும்பம் மீண்டதா என்பதே படத்தின் கதை.
A.குமரனின் ஒளிப்பதிவு அட்டகாசமாய் அமைந்துள்ளது. கிராமம் என்றாலே தேனி, தஞ்சை என பெரும்பாலும் தமிழ் சினிமா தஞ்சம் அடையும். வறண்ட பூமி என்றால் ராம்நாடு சென்றுவிடும். இப்படத்தில் கிருஷ்ணகிரி – குப்பம் (ஆந்திரம்) சாலை மருங்கே உள்ள உட்புற கிராமங்களைக் ...




