Shadow

Tag: மெல்லிசை

நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.!

நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.!

சினிமா, திரைத் துளி
மெல்லிசை படம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர எடுத்துக் கொண்ட காலதாமதம் குறித்த கோபம் விஜய் சேதுபதியிடம் இருந்தது. “யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் விஜய் சேதுபதி. அந்த காட்டு மரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வந்தா மலை போனா சென்ஸாரில் கட் பண்ணும் வார்த்தை என படங்கள் செய்கிறது. யாருடைய தயவும் இல்லாமல் வரக்கூடியவருக்குத்தான் புதியவர்களை அறிமுகம் செய்வதிலும், புதிய முயற்சிகளைச் செய்வதிலும் தைரியமும் மனோதிடமும் இருக்கும். இதுதான் அவரை உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்தால் அவ்ரென்றும் ரவுடித்தான்” என்றார் இயக்குநர் ராம். “நான் ஏதோ இயக்குநர்க்கு வாய்ப்புக் கொடுத்ததாகச் சொல்றாங்க. ஆனா உண்மையிலேயே ரஞ்ஜித் தான் எனக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். நீங்க படத்தைப் பார்த்தீங்கன்னா அது தெரியும்” என்றார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு கடும் சவால் விட்டுள்ளார் ...
விஜய் சேதுபதியின் மெல்லிசை

விஜய் சேதுபதியின் மெல்லிசை

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் 'மெல்லிசை' படத்தின் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். 'நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராசியமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பது தான் இந்த கதையின் கரு' என்றார் இயக்குநர். மேலும், படத்தின் தலைப்பைப் பற்றிப் பேசும் போது, “'மெல்லிசை’ என்பது மேலும் மேலும் கேட்கத் தூண்டும் சுகமான இசை வடிவம். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே 'ம...