Tag: மோர்ணா அனிதா ரெட்டி
எது சமுதாயப் பிணி?
மோர்ணா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பரத் துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இவர் தற்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது.
'என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்தப் பாத்திரத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்கப் போவது யாரென்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையைச் சொல்லி முடித்ததும் தீர்மானமாகச் சொன்னார் ' நீ தான் என்று'.
சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு...