“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி
‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம்.
“எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை.
ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்).
முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில்...