காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசாலிங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்...