Shadow

Tag: யுவன்

அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...
இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி - கருப்பு இணையின் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஜல்லிக்கட்டின் மேன்மையைப் பற்றிப் பேசும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு விளையாட்டல்ல, அது வீரம்; தமிழர்கள் தன் மானத்தை மாடுகளின் மீது இறக்கி வைத்தனர்; மாடு அணைபவனுக்கே பெண் என வசனங்கள் உள்ளன. மேலும், ஜல்லிக்கட்டின் வகைகளைப்...
யுவன் இசையில் ‘பலூன்’

யுவன் இசையில் ‘பலூன்’

சினிமா, திரைத் துளி
காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். "முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம். 'மெலோடி' என்றாலே அது யுவன்ஷங்கர் ராஜா தான். எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் எங்கள் பலூன் திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று நம்பிக்கையுடன் கூற...