கவியோகி சுத்தானந்த பாரதியார்
மாயலோகத்தில்..
1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாகச் சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது.
எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில் கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்...