
அயலான் விமர்சனம்
நெடுநாளாக புரொடெக்ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான். ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம்.
ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள். ந...