Shadow

Tag: ரக்ஷா ராஜ்

மயில்சாமி பேயின் கலாட்டா.!

மயில்சாமி பேயின் கலாட்டா.!

சினிமா, திரைத் துளி
‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. ‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன். படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தைச் சரியாகக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்குத் தோல்விதான் கிடைக்கிறது. ‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாள...