மது வடலாரா விமர்சனம்
நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார்.
இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர்.
ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. அப்பாட்டியை ஏமாற்ற முயன்று, அப்பாட்டியிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது பாட்டி இறந்து விடுகிறார். பாட்டியின் பிணத்தை மறைக்க அந்த வீட்டுக்குள் போய், அது தேவையில்லாமல் பெருஞ்சிக்கலில் இழுத்துவிட்டு விடுகிறது.
அதைச் சமாளிக்க முடியாமல் அவ்வீட்டிலேயே மயங்கிவிடும் நாயகன், மீண்டும் விழிக்கும் பொழுது, ரத...