Shadow

Tag: ரமேஷ் தமிழ்மணி

தமிழ்ப்படம் தயாரிக்கும் ‘தோனி’ என்டர்டெய்ன்மெண்ட்

தமிழ்ப்படம் தயாரிக்கும் ‘தோனி’ என்டர்டெய்ன்மெண்ட்

சினிமா, திரைச் செய்தி
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திராசிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தைத் தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கின்றனர். நிர்வாக இயக்குநரான திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாகத் தயாராகும் அந்தப் படைப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கெனத் தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்...