ஈட்டி விமர்சனம்
தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை.
புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார்.
சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக...