ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு
டோலிவுட்டில் மாஸ் மகாராஜாவாக இருந்து வரும் ரவி தேஜாவின் நடிப்பில் முதன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது “டைகர் நாகேஸ்வரராவ்” திரைப்படம் . நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். வம்சி இப்படத்தினை இயக்குகிறார். “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் ”கார்த்திகேயா – 2” படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தேஜ் நாராயண் அகர்வால் இப்படத்தை வழங்க , மயங்க் சிங்கானியா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒரு தனித்துவமான முறையில் அமைந்திருந்ததாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவ...