Shadow

Tag: ரவி ஷங்கர்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைத...