ரவீந்திர சங்கீதம் – தாகூருக்கு இசை அஞ்சலி
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 163 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கலாச்சார நிறுவனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. 1994 இல் ரவீந்திர சங்கீதப் பாடகராக இருக்கும் ஸ்வாதி பட்டாச்சார்யாவால், 2015 இல் தொடங்கப்பட்ட Sur O Lohori – கலை மற்றும் கலாச்சார நிறுவனம், சென்னை நிகழ்விற்குப் பொறுப்பேற்றது. இந்நிகழ்வில் வங்காளிகள் மட்டுமல்லாமல், நூறு பாடகர்களில், தமிழ், தெலுங்கு, ஒடியா, கொங்கனியைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் பங்கேற்றுப் பாடினர். ஸ்வாதி ப...