Shadow

Tag: ரஹ்மான்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார். பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை. மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுக...
குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி வ...