Shadow

Tag: ராகவா லாரன்ஸ்

படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

படை தலைவன் படத்தில் இணையும் ராகவா லாரன்ஸ்

சினிமா, திரைத் துளி
“புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குநராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடமிருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், ‘நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி’ என்றார்.இதைக் கேட்டதும் இயக்குநராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையைக் கா...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. ”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய ...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆ...
‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

சினிமா, திரைத் துளி
லைக்கா புரொடக்ஷன்ஸ்  சார்பில் தயாரிப்பாளர்  சுபாஷ்கரன்  தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி  நட்சத்திர  நடிகருமான  ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக  நடித்திருக்கும்  'சந்திரமுகி 2'  படத்தில்  இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி...'  எனத்  தொடங்கும்  முதல்  பாடல்  இன்று வெளியானதோடு பாடல் வரிகளுடன் கூடிய  வீடியோவாகவும்  வெளியாகி  இருக்கிறது. இயக்குநர்  பி. வாசு  இயக்கத்தில்  65 ஆவது  படமாக  தயாராகி  வரும் திரைப்படம்  'சந்திரமுகி 2' . இதில்  ராகவா  லாரன்ஸ்,  பாலிவுட்  நடிகை கங்கணா ரனாவத்,  'வைகைப்புயல்'  வடிவேலு,  மகிமா நம்பியார்,  லஷ்மி மேனன்,  சிருஷ்டி  டாங்கே,  ராவ் ரமேஷ்,  விக்னேஷ்,  ரவி மரியா,  சுரேஷ் மேனன்,  சுபிக்ஷா கிருஷ்ணன்  உள்ளிட்ட  பலர்  நடித்திருக்கிறார்கள்  ஆர். டி. ராஜசேகர்  ஒளிப்பதிவு  செய்திருக்கும்  இந்த  திரைப்படத்திற்கு  ஆஸ்கார் விருதினை  வென்ற  இசையமைப்பாளர்  எம். எம்....
புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா, திரைத் துளி
பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் பலகோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது.  திகில்  காமெடி கலந்து பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் சந்திரமுகி – 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றப் புகைப்படம், அதாவது  ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.மிகப் பெரிய  வெற்றியைப் பெற்ற  திரைப்படங்களை இயக்கிய  பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது  படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரி...
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சினிமா, திரைத் துளி
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகைப் புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்...
சந்திரமுகி 2 – ராகவா லாரன்ஸ் + வடிவேலு

சந்திரமுகி 2 – ராகவா லாரன்ஸ் + வடிவேலு

சினிமா, திரைத் துளி
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகைப் புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலுவும் இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளைப் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இச...
காஞ்சனா – 3 விமர்சனம்

காஞ்சனா – 3 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்!! இந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் படமான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள். ப...
காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

காஞ்சனா 3 இல் சுயாதீன கலைஞர்கள் – DooPaaDoo

சினிமா, திரைத் துளி
DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரைப் பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. பாடலாசிரியர் மற்றும் DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017இல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரைச் சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். பு...
ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....
காஞ்சனா விமர்சனம்

காஞ்சனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 காஞ்சனா - முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான 'முனி'க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் ஒட்டி வரும் இரத்தத் துளிகள் மூலம் பேயை வீட்டிற்குள் கொணர்ந்து விடுகிறான் ராகவா. பேய்களை விரட்ட ராகவா குடும்பத்தினர் முயல, பேய்கள் ராகவாக்குள் புகுந்து கொள்கின்றன. பேய்களின் வரலாறைத் தொடர்ந்து படம் தனது முதல் பகுதியான முனி போல் நிறைவுறுகிறது.ஆடுதல், பாடுதல், நல்லது செய்தல், அழகான நாயகியை காதலிப்பது போன்றவை தான் ந...