கொரில்லா – சேட்டைகளின் நாயகன்
கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது - சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். 'எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்' என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார்.
படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இ...