பாடலாசிரியர் சினேகனின் வருத்தமும், ராஜசேகர் கற்பூர பாண்டியன் விளக்கமும் | விருமன்
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’.
இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பாடலாசிரியர் சினேகன், “இந்த ‘விருமன்’ படத்தின் மதுரை விழாவிற்கு அழைக்காதது குறித்து ஒரு மேடையில் வருத்தம் தெரிவித்திருந்தேன். அதை மிகப் பெரிய வைரலாக்கி விட்டார்கள். அதற்காக 2டி நிறுவனத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து பெரிய பட்ஜெட் படங்களில் 2 படங்களில்தான் எங்களைப் போன்ற பாடலாசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அப்படி 2 படங்களில் ஒன்றாகத்தான் இப்படத்தை நினைத்திருந்...