தூங்கா வனம் விமர்சனம்
இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.
மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார்.
பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்த...