Shot Boot Three விமர்சனம்
நான்கு நண்பர்கள் தொலைந்து போன தங்கள் நாயைத் தேடிச் செல்லும் சாகசங்கள் நிறைந்த பயணம் தான் shot Boot Three திரைப்படத்தின் கதை.பணக்கார அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். தங்கள் சுக துக்கங்களோடு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும் கூட பங்கு பிரித்துக் கொள்ளும் பாசக்காரப் புள்ளைகளாக இருக்கும் அவர்களுக்கு, அந்த அப்பார்ட்மெண்டின் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருக்கும் பூவையாரும் நல்ல நண்பன். தனக்கு விளையாட்டுத் துணையாக ஒரு தம்பி கூட வேண்டாம், ஒரு நாய்குட்டி போதும் என்று கோரும் தங்கள் நண்பனின் கோரிக்கையை அவன் பெற்றோர் உதாசீனப்படுத்த, நண்பர்கள் சேர்ந்து ஒரு குட்டி நாய்க்குட்டியை தங்கள் நண்பனின் பிறந்தநாள் பரிசாக கொடுக்கிறார்கள். அப்படி கிடைத்த அவர்களின் நட்பு வட்டத்திற்குள் வந்த நாய்க்குட்டி ஒரு நாள், இவர்களின் ...