Shadow

Tag: ராஜ்குமார்

ஷுட் த குருவி விமர்சனம்

ஷுட் த குருவி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம். குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன். கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்ற...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.   அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. என்பதற்கு எல்லாம் பதில் திரையில்.   தற்காலிகமாக நினைவிழுக்கும் ப்ரேமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். செப்டம்பரில் சுந்தர பாண்டியன், அக்டோபரில் பீட்சா, நவம்பரில் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் என இந்த வருடத்தின் முடிவு அவருக்கு நிறைவாய் அமைந்துள்ளது. இரண்டு தேசிய விருதுகள் பெற்ற 'தென்மேற்கு பருவக் காற்று' என்னும் படத்தில்  ...