Shadow

Tag: ராஜ் பரத்

கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிற...
ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு வயதான ஜமீன்தாரிடம் அடைக்கலம் கோருகின்றன. யானை எறும்புகளைத் தேடி வருகின்றது. அந்தப் பணத்தால் யானை வாழ்ந்ததா அல்லது நான்கு எறும்புகள் வாழ்ந்தனவா என்பதே படத்தின் கதை. கதாப்பாத்திரங்களைக் காமிக்கலாக அறிமுகம் செய்கின்றனர். ஆனால், அந்த ஃப்ளோ படம் முழுவதும் தொடர்வதில்லை. இடையில் இயக்குநர், "நதி ஒரே திசையில் தான் நகரமுடியும். நதியில் இருக்கிற படகு இரண்டு திசையில் நகரும். நதியில் இருக்கிற மீன் நாலு திசையில் நகர முடியும். அதைக் கொத்திட்டுப் போற பறவை அஞ்சு திசையில நகரலாம். ஆனா கரையோரம் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துட்டிருக்கிற ஒருத்தனோட மனசு, எல்லாத் திசையிலும் நகரும்" என்று சீரியசான குரலில் வாய்ஸ்-ஓவர் தருகிறார். நதி, படகு, மீன், வேடிக்கை பார்ப்பவனின் மனது போன்றவை எதைக் குறிக்கிறது என்ற தெளிவில்லை. மனதில் எதையும் பதிய விடாமல் கலைத்த...