
நாக பந்தம் – விராட் கர்ணா நடிக்கும் மாயவாத படம்
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் ப்ரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார்.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி, தாடி, நேர்த்தியான உடல் அமைப்பு, சட்டை இல்லாத தோற்றம், ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. அவரின் இந்த துணிச்சலான கடலில் அச்சுறுத்தும்...