80’ஸ் பில்டப் விமர்சனம்
சந்தானத்தின் தாத்தா R. சுந்தர்ராஜன் இறந்து விட, அவரது 5 ஆசைகளை நிறைவேற்றிய பின்பே அவரை அழைத்துச் செல்வேன் என வரமளிக்கிறார் எமன் K.S.ரவிக்குமார். தாத்தாவின் சாவிற்கு வரும் ஒரு பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார் கமல் ரசிகரான சந்தானம். தாங்கள் திருடிய வைரங்கள், இறந்துவிடும் R. சுந்தர்ராஜனின் வயிற்றுக்குள் மாட்டிக் கொள்ள, அதை மீட்கப் பார்க்கின்றது மன்சூர் அலிகானின் குழு. இந்த மூன்று கதையும், ஒரு சாவு வீட்டில் நிகழ்கிறது. சந்தானத்தின் காதல் கை கூடியதா, R. சுந்தர்ராஜனின் ஆசைகள் நிறைவேறினவா, திருட்டுக் குழுவிற்கு வைரங்கள் கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.
மேலே உள்ள பத்தியிலுள்ள மூன்று கதையையும் ட்ரெய்லரியே காட்டி, ஒரு பக்காவான காமெடிப் படத்திற்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குநர் கல்யாண். ஆனால், அண்ணனுக்கும் – தங்கைக்கும் எதற்கெடுத்தாலும் சவால் என புதுக்கதையில் படம் தொடங்கிப் பயணிக்...