ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு
மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன்
ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை.
நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர!’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ஆக்கப் பார்க்கிறாங்க. ‘ந...