Shadow

Tag: ராம்பிரகாஷ் ராயப்பா

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடுகி...
போக்கிரி ராஜா விமர்சனம்

போக்கிரி ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்' என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை. யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். "எனக்கே விபூதி அடிக்கிறாயா?" என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, "பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?" என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும் க...
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை. வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்த...