லட்கி – இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்
ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்ஷன் மற்றும் இந்தோ - சைனீஸ் கோ ப்ரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லட்கி (Ladki)'. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் "பொண்ணு" என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ராம் கோபால் வர்மா, "இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே ப்ரூஸ் லீ, என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த...