Shadow

Tag: ராம் சரண்

கேம் சேஞ்சர் விமர்சனம்

கேம் சேஞ்சர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண். கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் இருக்கும் சத்யமூர்த்தியின் வளர்ப்பு மகன் பொப்பிலி மோபிதேவி, ராமை 'பாலிட்ரிக்ஸ்' செய்து கட்சியை விட்டு நீக்கி விடுகிறார். ராம் நந்தன் தேர்தல் ஆணையராகி விடுகிறார். இப்படி, காட்சிகள் கதையின் வேகத்தை விட துரிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. முதல்வன் படத்தில், ஒருநாள் முதவராக அர்ஜுன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஐ...
கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட...
ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16

ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் #RC16

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் த்ரில்லர் திரைப்படமான 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தைத் தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் 'RC16' எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரி...
ராம் சரண் – புச்சி பாபு சனா படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

ராம் சரண் – புச்சி பாபு சனா படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

திரைச் செய்தி, திரைத் துளி
குளோபல் ஸ்டார்' ராம்சரண் - இயக்குநர் புச்சி பாபு சனா - தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் 'ஆஸ்கார் நாயகன்' ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா - தனது முதல் படைப்பாளியான 'உப்பென்னா' எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செ...
ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’

ராம்சரண் இன் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (AMPAS)’

சினிமா, திரைத் துளி
அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும், மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்’ குழுவில், 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் இணைந்திருக்கிறார். அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காகக் கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார். 94 ஆவது அகாடமி விருதுகளில், ஆர்ஆர்ஆர் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு..' என்ற மறக்க முடியாத பாடலுக்கா...
ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

ராம் சரணின் வசீகரமும் தனித்துவமும்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில், ஆஸ்கர் விருதினைப் பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண் - உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்தக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை இந்த வேனிட்டி ஃபேர் எனும் யூட்யூப் சேனலில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளி என்ற சாதனையும் படைத்திருக்கிறது. உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதால் உலக நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம்சரண் மற்றும் அவரது அன்பும் அழகும் நிறைந்த மனைவி உபாசனா என இருவரும் வாழ்க்கையின் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றான ஆஸ்கர் விருதிற்கு கலந்து கொள்ளும் தருணங்கள், இந்தக் காணொளியில் இடம் பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருது நிகழ்வில் அவரது நடிப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'நாட்டு நாட்டு..' எனும் பாடலுக்காக ஆஸ்கர் விருத...
ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

ஆயிரம் மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் கடந்த RRR

சினிமா, திரைத் துளி
எஸ்.எஸ்.ராஜமௌலியின் “RRR (ஆர் ஆர் ஆர்)” திரைப்படம் 1000 மில்லியன் நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படமான RRR, மே 20, 2022 அன்று ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது. இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., “நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள RRR திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். நடிகர் ராம் சரண், “ஜீ5 இல் வெளியாகியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ மீத...
RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR என...