Shadow

Tag: ராம் பொத்தினேனி

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா' முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் 'ஹமாம்' சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு. இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் 'அட்டாக்' வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒ...
டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

டபுள் மாஸாக ‘டபுள் இஸ்மார்ட்’

Movie Posters, அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்". மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோ...
தி வாரியர் விமர்சனம்

தி வாரியர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் சத்யா. குரு, சத்யாவை நையப்புடைத்துத் தொங்க விட்டுவிடுகிறார். உயிர் பிழைக்கும் சத்யா, ஐபிஎஸ் அதிகாரியாக மதுரை வருகிறார். குருவின் சாம்ராஜ்ஜியம் நிர்மூலமாகிறது. கமர்ஷியல் ஃப்ளேவர்கள் இல்லாமல் படம், புஜ பல பராக்கிரமசாலியான குருவிற்...