Shadow

Tag: ராய் லட்சுமி

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தியில் தான் 'ஜூலி 2'. தமிழ் டப்பிங்கில், இயக்குநரின் பெயரோடு சேர்ந்தே தலைப்பிடப்பட்டுள்ளது. ஜூலி என்ற நடிகையின் அகச் சிக்கல்களைப் பேசுவதுதான் படத்தின் கதையாக இருந்திருக்க வேண்டும். ராய் லக்‌ஷ்மியின் பாலிவுட் அறிமுகம் மிக எரோடிக்காக (Erotic) அமைந்துள்ளது. படத்தில் கதை என்ற ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்ற போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத திரைக்கதை, ராய் லக்‌ஷ்மியின் உடலையே மொய்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்கான துகிலுரிப்பாக இல்லாமல், துகிலுரிப்பிற்காகவே இப்படமென்ற இயக்குநர் தீபக் ஷிவ்தசானியின் தெளிவு திடுக்கிட வைக்கிறது. தனது தெளிவிற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற ரீதியில் மட்டும் அவரைப் பாராட்டலாம். நல்ல நடிகையாக எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் இருக்க முயன்று, அதிலிருந்து வழுவி, தொப்புத் தொப்பென்று பிராவை நழுவ விட்டு, தன் உடலை மூலதனமாக்கி பிரபல நடிகை ஆகி விடுகிறார...
அரண்மனை விமர்சனம்

அரண்மனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார். தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தையை ...
காஞ்சனா விமர்சனம்

காஞ்சனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  காஞ்சனா - முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான 'முனி'க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் ஒட்டி வரும் இரத்தத் துளிகள் மூலம் பேயை வீட்டிற்குள் கொணர்ந்து விடுகிறான் ராகவா. பேய்களை விரட்ட ராகவா குடும்பத்தினர் முயல, பேய்கள் ராகவாக்குள் புகுந்து கொள்கின்றன. பேய்களின் வரலாறைத் தொடர்ந்து படம் தனது முதல் பகுதியான முனி போல் நிறைவுறுகிறது.ஆடுதல், பாடுதல், நல்லது செய்தல், அழகான நாயகியை காதலிப்பது போன்றவை தான் நாய...