ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி
'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ஆனந்தி தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. "ராவண கோட்டம்" அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களைக் கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்குப் பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.
சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் ...