Shadow

Tag: ராஷி கண்ணா

சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்ம...
துக்ளக் தர்பார் விமர்சனம்

துக்ளக் தர்பார் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை. கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்...
சங்கத்தமிழன் விமர்சனம்

சங்கத்தமிழன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் ப...
அயோக்யா விமர்சனம்

அயோக்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2015 ஆம் ஆண்டு, வக்கந்தம் வம்சியால் எழுதப்பட்டு, பூரி ஜெகன்னாதரால் இயக்கப்பட்ட 'டெம்பர்' என்ற தெலுங்குப் படத்தின் உத்தியோகபூர்வ மறு உருவாக்கம் இப்படம். பணமே சகல அதிகாரங்களையும் தருமென்பதையும், காவல்துறையில் சேர்ந்தால் அப்பணத்தை சுலபமாக அடையலாம் என்பதையும் சிறு வயதிலேயே கண்டுணர்கிறான் யாருமற்ற அநாதை சிறுவனான கர்ணன். காவல்துறையில் சேருவதை லட்சியமாக்கி, கொண்ட லட்சியத்தின் படி போலீஸாகவும் ஆகி, அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து சகல வழிகளிலும் பணத்தை அடைகிறான். அத்தகைய அயோக்கியனை சமயச்சந்தர்ப்பம் யோக்கியனாக மாற்றுவதுதான் படத்தின் கதை. செய்வது அயோக்கியத்தனம் என்றாலும், மட்டு மரியாதை குறையும் பட்சத்தில், சுர்ரெனக் கோபம் சூடாய் மண்டையில் ஏறி தன்முனைப்பு உசுப்பிவிடப்பட்டு தன்னிலை மறந்துவிடுவான் கர்ணன். ஜூனியர் என்.டி.ஆர் அளவு விஷால் தன்னிலை மறக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படியாகும் பட்சத்...
அடங்க மறு விமர்சனம்

அடங்க மறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம். பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம். சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் காப்பாக சுபாஷ் எனும் பாத்திரத்தில் ஜெயம் ரவி கலக்கியுள்ளார். அவருக்கும் இன்னும் தனி ஒருவன் ஹேங் ஓவர் போகவில்லை என்றே சொல்லவேண்டும். சுபாஷின் அழகான காதலி அனிதாவாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள். கோடீஸ்வர தந்தை நால்வர், அவர்களது நான்கு உருப்படாத அயோக்கிய மகன்கள். இவர்களின் கதாபாத்திர வார்ப்...
இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா - ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது....
இமைக்க விடாப் படம்

இமைக்க விடாப் படம்

சினிமா, திரைத் துளி
சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா - நயன்தாரா - ராசி கண்ணா - பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'. 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது. "தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்...
கேமியோ – அதர்வா – ராஷி

கேமியோ – அதர்வா – ராஷி

சினிமா, திரைத் துளி
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது.இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம்....