ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அழகான போஸ்டர்
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த புகழ்பெற்ற பான்-இந்தியா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது. இன்று ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பா...