Shadow

Tag: ரிது வர்மா

மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால டைம...
நித்தம் ஒரு வானம் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை. மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடு...
நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

சினிமா, திரைச் செய்தி
வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்‌ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையும்...