Shadow

Tag: ரியாஸ் கே அஹ்மது

வாரிசு விமர்சனம்

வாரிசு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ பரிணாமம் அடைய, வலுவானதொரு வில்லன் தேவை. படத்தில், சொல்லிக் கொள்ளும்படியான வில்லத்தனத்தை ஜெய், அஜயாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் ஷாமுமே செய்து விட, தொழிலதிபர் ஜெயபிரகாஷாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் பாத்திரம் டம்மி வில்லனாகக் காற்று போன பலூனாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன் விஜயே கடுப்பாகி...
நான் மிருகமாய் மாற விமர்சனம்

நான் மிருகமாய் மாற விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் தேவராஜனைக் கூலிப்படையினரிடம் இருந்து காப்பாற்றுகின்றான் பூமிநாதனின் தம்பி. தேவராஜனைக் கொல்ல முடியாத ஆத்திரத்தில், பூமிநாதனின் தம்பியைக் கொன்றுவிடுகின்றனர் கூலிப்படையினர். சட்டத்தை நம்பாமல், தன் கைகளாலேயே கூலிப்படையினரைக் கொன்று விடுகிறார் பூமிநாதன். பூமிநாதனின் குடும்பத்தைக் கொன்று விடுவதாக அச்சுறுத்துகிறான் தாஸ் எனும் கூலிப்படைத் தலைவன். பூமிநாதனின் குடும்பம் பிழைக்க வேண்டுமென்றால், தேவராஜனைக் கொலை செய்யும்படி பூமிநாதனை நெருக்குகிறான் தாஸ். தன் குடும்பத்திற்காக மிருகமாய் மாறும் பூமிநாதன் எப்படி தாஸிடமிருந்து காப்பாற்றுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. கொலைகளும், ரத்தத் தெறிப்புகளுமாக உள்ளது படம். கதையிலுள்ள வன்முறையை விட, காட்சிகளாக விரியும்போது வன்முறை தாண்டமாடியுள்ளது. வன்முறையையும், ரத்தத்தெறிப்புகளையும் நம்பியே இயக்குநர் சத்யசிவா படம் எடுத்துள்ளது போல் தெரிகிறது. முதற்பா...
சங்கத்தமிழன் விமர்சனம்

சங்கத்தமிழன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் ப...
கீ விமர்சனம்

கீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கீ என்ற சொல்லிற்கு, 'எவ்வளவு நன்மைகள் உண்டோ அவ்வளவு தீமைகளும் உண்டு' என தொல்காப்பியத்தில் பொருளுள்ளதாக இயக்குநர் காளீஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கணினியில் நாம் பயன்படுத்தப்படும் கீ (Key)- க்கள் தான் நமது நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறது என்றும் தலைப்பிற்குப் பொருள் கூட்டுகிறார் இயக்குநர். இயக்குநர் காளீஸ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும், 100 திரைப்படத்தினைப் போலவே, கதைக்குள் நேரடியாகச் செல்லாமல் அலைபாய்கிறது. சைபர் க்ரைமை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படம் எப்படித் தொடங்கக் கூடாது என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி. ஹீரோவின் அறிமுகம், நேரடியாகப் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பாட்ஷா வைரஸ் குறித்து அவர் விளக்கமளித்து, அதைக் கொண்டு எந்தப் பெண்ணுடன் டேட்டிங் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கிறார். பல ...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க...
சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே! நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ர...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பா...
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார். காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ராம...
சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது. 'ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?' எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு. படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமா...
கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்...
“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும...
வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இன்ஜினியர் ஆஃப் தி இயர்' பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். அவரால் ஒரு நிமிடத்தைக் கூட வேஸ்ட் செய்ய முடியாத அளவு பிஸியான கதாபாத்திரமாம். ஆனாலும், நம்பர் 1 இன்ஜினியர் ஆன ரகுவரனைக் கார்னர் செய்ய தன் பொன்னான நேரத்தையும், கோடிக்கணக்கில் பணமும் செலவழிப்பார் என்பது முரணாக உள்ளது. மனைவி என்றாலே கத்திக் கொண்டே இருப்பார் என்பதைப் படத்தின் முதல் பாதியில் தேவைக்கு அதிகமாகவே பதிகிறார். சிகரெட் பி...
மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

சினிமா, திரைச் செய்தி
விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் முதல் படம் கதாநாயகன் ஆகும். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது. இது அவரைக் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு ஃபேம...