தி ஜங்கிள் புக் விமர்சனம்
தொன்னூறுகளில், சரியாகச் சொல்லணும் எனில் 1993 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மதியம் 12:30 மணிக்கு தூர்தர்ஷன் பார்த்த பாக்கியவான்கள் மனதில் இருந்து அகலாப் பாத்திரங்கள் மோக்லி, பகீரா, அகெலா, பாலு, ஷேர் கான் போன்றோர்கள். அப்பாத்திரங்களை பெரிய திரையில் உலாவ விட்டு, பாக்கியவான்களை 20 வருடங்களுக்கு முன் அழைத்துச் சென்று அதி பாக்கியவான்கள் ஆக்கியுள்ளது டிஸ்னி.
ஓநாய்களால் வளர்க்கப்படும் மனிதக் குட்டி மோக்லியைக் கொல்லத் துடிக்கிறது ஒற்றைக் கண் புலியான ஷேர் கான். மோக்லி எவ்வாறு ஷேர் கானிடமிருந்து தப்புகிறான் என்பதே படத்தின் கதை.
படம் தரும் விஷூவல் அனுபவத்தை, ‘ஜங்கிள் சஃபாரி’ என்றே சொல்ல வேண்டும். காட்டுக்குள் பிரவேசித்து விட்ட பரவச உணர்வைத் துல்லியமாகத் தருகிறது படம். முதலையின் பற்களை குருவிகள் அமர்ந்து சுத்தம் செய்வது, உறுமும் ஷேர் கானின் திடுக் க்ளோஸ்-அப், நம்மை உரசுவது போல் மிதந்து வரும் கட்டை, ...