Shadow

Tag: ரேவதி

கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை. நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும். 'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவின்...
கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை. தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் தொட்டுள்ளது. எனினும் படம் அந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, 'இந்திராம்மாடா! ப்பாஆஆ, என்ன ஒரு போராளி' எனத் தொடர்ந்து பதிகிறது. அதுவும் காட்சிகளாக இல்லாமல் வசனங்களாக. புளியன் மலையின் தலைவர் பார்த்திபன், சமூக அக்கறையுள்ள வக்கீல் நாசர், தமிழக எல்லையின் கலெக்டரான ரேவதி, புளியன் மலை ஊர்வாசியான அனுஹாசன், நீதிபதி ரேகா...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்...
அம்மா கணக்கு விமர்சனம்

அம்மா கணக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மகளின் கணக்குப் பிரச்சனையை அம்மா எப்படிக் கணக்கு போட்டே தீர்க்க முயல்கிறார் என்பதுதான் படத்தின் கரு. ஓட்டுநரின் மகன் ஓட்டுநராகவும், வேலைக்காரியின் மகன் வேலைக்காரியாகவும் தானே போகப் போகிறார்கள்; அதற்கு ஏன் அநாவசியமாகக் கஷ்டப்பட்டுப் படிக்கணும் என்கிறாள் பத்தாம் வகுப்பு மாணவி. மே...