ஸ்பாட் விமர்சனம்
ஸ்பாட் என்றால் ஓரிடம் அல்லது ஒருவரின் லோக்கேஷனைக் கண்டுபிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்திற்கு, இரண்டு பொருளுமே பொருந்தும். முதற்பாதியில், நாயகியின் லோக்கேஷனை வில்லனின் ஆட்கள் அவரது ஃபோனை வைத்துக் கண்டுபிடித்த (spot) வண்ணம் உள்ளனர். இரண்டாம் பாதியில், நாயகன் ஓரிடத்திற்கு (spot) வில்லன்களை மொத்தமாக வர வைக்கிறார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை முழுவதுமே சேஸிங் (chasing) தான். மஹிந்திரா ஸ்கார்பியோவை, மிட்சுபிஷி பஜேரோ துரத்திக் கொண்டே உள்ளது. ஸ்கோர்பியாவில் நாயகன், நாயகி, நாயகனது மூன்று நண்பர்கள் உள்ளனர். சென்னையில் தொடங்கும் அந்த சேஸிங் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள கன்டெயினர் யார்டில் முடிகிறது.
லொள்ளு சபா மனோகரின் மகன் ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். நாயகனின் நண்பர்கள் மூவரில் ஒருவராக வருகிறார். கலகலப்பிற்கு உதவக்கூடிய ஸ்கோப் இருந்தும் அதற்கான மெனக்கெடல் இல...